நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு
நெல்லிக்குப்பம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் ரூ.1.30 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் ராஜ்குமார் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.30 கோடி செலவில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகளை அமைச்சர் ராஜ்குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரித்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
