கடலூரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 செல்போன்களை சைபர் பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கையின் மூலம் கண்டறிந்து மீட்டனர்.
மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உரிய உரிமையாளர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
