பள்ளி வேனில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி வேனிலிருந்து இறங்கி சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் ஆத்விக், அதே வேன் மோதி உயிரிழந்தான்.
சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஓட்டுநர் தப்பியோடினார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் வேனை அடித்துச் சேதப்படுத்தினர். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
