60 வயதான விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
தருமபுரியில் நடந்த விவசாய தொழிலாளர்கள் சங்க மாநாட்டில், மூத்த விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரியில் நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய மாநாட்டில், 60 வயதான விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
