அரூர் அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
அரூர் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.

அரூர் அருகே இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதியதில், தீர்த்தமலை பகுதியைச் சேர்ந்த அபிநாத் (20), இனியன் (19) ஆகிய 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்தில், பையர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பரசுராமன் (43) என்பவர் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதில் உயிரிழந்தார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
