ETN News சமீபத்திய அப்டேட்கள்
Dharmapuri · district

தருமபுரி நாம் தமிழர் கட்சி உட்கட்சிப் பூசல்: நிர்வாகிகளிடம் சீமான் ஆவேசம்

தருமபுரி நாம் தமிழர் கட்சி உட்கட்சிப் பூசல்: நிர்வாகிகளிடம் சீமான் ஆவேசம்

தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனை நீக்கக் கோரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாகப் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தலைமை நியமிக்கும் நிர்வாகியை எதிர்க்கும் தொண்டர்கள் வேறு கட்சியில் சேரலாம் என்று ஆவேசமாகப் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"நானாவது உங்கள் தொகுதிக்குள் வரலாமா? நாளை என்னையே விலகச் சொல்வீர்களா?" என்று கேள்வி எழுப்பிய சீமான், கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நிர்வாகிகளுக்குக் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.

செய்தி மூலம்: OneIndia Tamil - Latest

← மேலும் மாவட்ட செய்திகள்