ஒகேனக்கல்லில் நீர்வரத்து 100 கனஅடியாக சரிவு
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 100 கனஅடியாகக் குறைந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 18-ம் தேதி விநாடிக்கு 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 19-ம் தேதி 150 கனஅடியாகக் குறைந்தது.
இந்த நிலையில், நீர்வரத்து நேற்று மேலும் குறைந்து விநாடிக்கு 100 கனஅடியாகச் சரிவடைந்துள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
