கோட்டப்பட்டி அருகே மான் இறைச்சி சமைத்தவருக்கு ரூ.1.10 லட்சம் அபராதம்
கோட்டப்பட்டி அருகே வீட்டில் மான் இறைச்சி சமைத்த நபருக்கு வனத்துறையினர் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்தனர்.

தருமபுரி மாவட்டம், கோட்டப்பட்டி அருகே வனத்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வனச்சரக அலுவலர் மு. ஆனந்தகுமார் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.
சின்னக்கண் என்பவர் தனது வீட்டில் மான் இறைச்சி சமைத்திருந்தது கண்டறியப்பட்டது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி அவருக்கு ரூ.1.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். வனவிலங்குகளை வேட்டையாடுவதும், இறைச்சியை பயன்படுத்துவதும் குற்றம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
