தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரூரில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

அரூர் மின்வாரிய அலுவலகம் அருகே தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வேலைநிறுத்தத்தில் மாவட்டச் செயலாளர் ஞானக்குமரன், மாநிலத் துணைச் செயலாளர் எம்.சத்தியராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். அரூர் கோட்டத்திற்கு உட்பட்ட பல ஒப்பந்த பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
