தொப்பூர் அருகே விபத்துக்குள்ளான கார்: தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
தொப்பூர் அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட கார் விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விபத்து நடந்தவுடன் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீஸார் காரை ஆய்வு செய்தபோது, அதில் 5.700 கிலோ பான் மசாலா மற்றும் 45 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து தொப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
