கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் குறுவை தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் குறுவை பருவ தக்காளி பயிருக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
விவசாயிகள் பொது சேவை மையங்கள் அல்லது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட இணையதளம் மூலம் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
