ETN News சமீபத்திய அப்டேட்கள்
Dharmapuri · education

நீட் நுழைவுத் தேர்வில் தருமபுரி விஜய்ஸ் ஏஸ் அகாடமி மாணவர்கள் சாதனை

நீட் நுழைவுத் தேர்வில் தருமபுரி விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் பயின்ற 30 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வில் தருமபுரி விஜய்ஸ் ஏஸ் அகாடமி மாணவர்கள் சாதனை

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் சார்பில் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்காக விஜய்ஸ் ஏஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது.

நடப்பு கல்வியாண்டில் இம்மையத்தில் பயிற்சி பெற்ற 30 மாணவ, மாணவிகள் தேர்வில் சிறப்பிடம் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். மாணவர் சஞ்சீவன் 613 மதிப்பெண்களுடன் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதலிடமும், மாணவர் ஹாசன் 606 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மாணவி பிரித்திகா தர்ஷினி 596 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் இம்மையத்தில் பயிற்சி பெற்ற 254 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்