விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூரில் உள்ள கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வரும் காலங்களில் அரசு திட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
