மதுக்கடை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மனு
புங்கம்பள்ளம் கிராமத்தில் அரசு மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டம், அதிகாரப்பட்டி அருகில் உள்ள புங்கம்பள்ளம் கிராமத்தில் அரசு மதுபானக்கடை திறக்க முயற்சி நடப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வழியில் மதுக்கடை அமைந்தால் அச்சத்துடன் பயணிக்க வேண்டியிருக்கும் என்றும், விளைநிலங்களில் பாட்டில்கள் வீசப்படுவதால் பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
