மரவள்ளியில் செம்பேன் தாக்குதல்: கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த தோட்டக்கலைத் துறை வழிகாட்டல்
தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளியில் காணப்படும் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் செம்பேன் (Red Mite) தாக்குதல் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதாலேயே இந்த பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகத் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்த விவசாயிகள் இயற்கை முறையில் வேப்ப எண்ணெய் (5 மி.லி/லிட்டர்) தெளிக்கலாம். தாக்குதல் ஆரம்ப நிலையில் இருந்தால் பெவேரியா பேசியானா (5 கிராம்/லிட்டர்) பயன்படுத்தலாம். தீவிரத் தாக்குதல் இருந்தால் ஸ்பைரோமீஸிபென் (1 மி.லி/லிட்டர்) மருந்தைத் தெளிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
