ஓசூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக்கோரி ஓசூரில் விவசாயிகள் சங்கத்தினர் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

தென்பெண்ணை ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஓசூர் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கெலவரப்பள்ளி அணை பாசனப் பகுதியில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
