பிரதமர் இல்லத்தின் முன்பு ராகுல் திடீர் போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்தினர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பேரணி நடத்தினர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதன்போது போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். போராட்டத்தின்போது ராகுல் காந்தியின் மூக்கில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளையில், நீட் தேர்வு விவகாரம் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக நேற்றும் முடங்கின.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
