அரூரில் ரூ.73.80 லட்சத்திற்கு பருத்தி ஏலம் விற்பனை
தருமபுரி மாவட்டம் அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.73.80 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

தருமபுரி மாவட்டம் அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,500 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.9,873-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8,949-க்கும் விலை போனது. மொத்தம் 300 குவிண்டால் பருத்தி ரூ. 28.80 லட்சத்திற்கு விற்பனையானது. மேலும், அரூர் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.45 லட்சத்திற்கு பருத்தி விற்பனையாகி, மொத்தமாக ரூ.73.80 லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
