திண்டுக்கல்லில் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் திருமதி துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, அரசுத் துறை அதிகாரிகளுடன் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
செய்தி மூலம்: Dindigul District Administration - Press Releases
