வேடசந்தூர் அருகே காரில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்
வேடசந்தூர் அருகே வாகனத் தணிக்கையின் போது காரில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

வேடசந்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகிக்கும்படியான ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து, காரை ஓட்டி வந்த பெங்களூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை போலீஸார் கைது செய்து, குட்கா பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
