ஆவின் நிறுவன வெண்ணெய் உற்பத்தி மையம் பழநியில் அமையுமா? தவெக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு
பழனியில் மூடப்பட்டுள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தைச் சீரமைத்து, வெண்ணெய் உற்பத்தி மையம் அமைக்க புதிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் தினமும் 40,000 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. பழனியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையம் கடந்த 2022-ம் ஆண்டு இயந்திரக் கோளாறால் மூடப்பட்டது. இதனால், பால் சேமிப்பு கலன்கள் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன.
பழனியில் வெண்ணெய் உற்பத்தி மையம் அமைப்பதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும், உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் ஆவின் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதற்கான ஒப்புதல் பெறப்பட்டும், கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் திட்டம் கிடப்பில் உள்ளது. புதிய அரசு இதற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
