குஜிலியம்பாறை அருகே கடைகளில் ரூ.1.50 லட்சம் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே இரு கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர். வெள்ளோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.
திருமூர்த்தி என்பவரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் ராமச்சந்திரன் என்பவரின் மாட்டுத்தீவனக் கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளது. குஜிலியம்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
