வளர் இளம் பருவத்தினருக்கு வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி
திண்டுக்கல் அருகே வளர் இளம் பருவத்தினருக்கான வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே உள்ள வி.புதுக்கோட்டை கிராமத்தில், வளர் இளம் பருவத்தினருக்கான வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சீனிவாசன் தலைமை வகித்தார். சமூக நலன் பயிற்சியாளர் பவித்ரா, பாலின பாகுபாடு குறித்தும், அது தொடர்பான பாதிப்புகள் மற்றும் போக்சோ சட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா வரவேற்றார். ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
