ETN News சமீபத்திய அப்டேட்கள்
Bhavani · district

புதிய மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பவானி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பவானியில் ரிங் ரோடு இணைப்புப் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பவானி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பவானி அருகே உள்ள லட்சுமி நகர், கோணவாய்க்கால் ரிங் ரோடு இணைப்புப் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பவானியில் புதிதாக அமைக்கப்பட்ட ரிங் ரோடு, லட்சுமி நகர் சோதனைச் சாவடி பகுதிக்கு மீண்டும் வருவதால், அந்தப் பாதை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, புதிய மேம்பாலம் அமைத்துத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்