கோபியில் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வரும் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து கோபிசெட்டிபாளையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. வரும் 24-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாம் நடைபெறும்.
இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தனியார் துறையில் பணியில் சேர விரும்பும் தகுதியான நபர்கள் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கு முன் பதிவு கட்டாயம் என்றும், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
