பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி - கோவை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஈரோடு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, கோவை ஹாவ்ல் வால்வ்ஸ் இந்தியா நிறுவனத்துடன் தொழில்-கல்வி இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, கோவை ஹாவ்ல் வால்வ்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான தொழில்நுட்பக் கல்வி, செயல்வழிக் கற்றல் மற்றும் தொழில்முறை முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கல்வி கற்றலுக்கும் தொழில்துறை நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான இப்பயிற்சித் திட்டத்தில், தொழில் நிபுணர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள், கூட்டுத்திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் ஆர்.பாஸ்கர் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
