ETN News சமீபத்திய அப்டேட்கள்
Sathyamangalam · education

பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சத்தியமங்கலத்தில் பழங்குடியினர் நலத்துறை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

பழங்குடியினர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினர் நலத்துறை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுடலை மணி இந்தப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

பள்ளிகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதன் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, 2026-27-ம் கல்வியாண்டு வரை ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்