கடம்பூரில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு
கடம்பூர் அருகே காட்டு யானை மிதித்ததில் விவசாயி தங்கவேல் உயிரிழந்தார்; இழப்பீடு மற்றும் பாதுகாப்பு கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை மிதித்ததில் விவசாயி தங்கவேல் (65) உயிரிழந்தார். இவர் நேற்று முன்தினம் தனது தோட்டத்திற்குச் சென்றவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் தேடியபோது, தனது நிலத்தில் உடல் நசுங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டனர்.
உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்ற வனத்துறையினர் மற்றும் போலீஸாரை உறவினர்கள் தடுத்தனர். யானையை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடல் மீட்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
