ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் 12-ம் ஆண்டு விழா
ஈரோட்டில் நடைபெற்ற ஒளிரும் ஈரோடு அறக்கட்டளையின் 12-ம் ஆண்டு விழாவில், கடந்த 12 ஆண்டுகால சமூக சேவை திட்டங்கள் மற்றும் வருங்கால இலக்குகள் குறித்த 'விஷன் 2035' ஆவணம் வெளியிடப்பட்டது.

ஈரோடு பரிமளம் மகாலில் ஒளிரும் ஈரோடு அறக்கட்டளையின் 12-ம் ஆண்டு விழா (மாமாங்கம்) கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள், எம்.பி., மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், கடந்த 12 ஆண்டுகளில் நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் சுமார் ரூ.46 கோடி மதிப்பில் 264 திட்டங்களை இந்த அறக்கட்டளை செயல்படுத்தியுள்ளதை பாராட்டிப் பேசினர். சமூக பொறுப்புணர்வுக்காக தமிழக அரசின் விருதுகளைப் பெற்ற இந்த அமைப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் போது, வரும் 2035-ம் ஆண்டு வரையிலான திட்டங்கள் அடங்கிய 'விஷன் 2035' ஆவணத்தை அறக்கட்டளை வெளியிட்டது. இவ்விழாவில் மாவட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
