பவானியில் பெண் சிசுவை கொன்றதாக பாட்டி கைது
ஈரோடு மாவட்டம் பவானியில் பிறந்த பெண் குழந்தையைக் கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் பிறந்த ஒரு நாள் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறி, அக்குழந்தையின் பாட்டி தங்கமணியை போலீஸார் கைது செய்தனர்.
எடப்பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கவனிக்க வந்த பாட்டி, மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றம் அடைந்து, குழந்தையைக் கொன்றதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
