தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் சேர சிறப்பு முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களை நல வாரியத்தில் சேர்க்க சிறப்பு முகாம்கள் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், விடுபட்ட பணியாளர்களைப் பதிவு செய்யவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.
இந்த முகாம்கள் ஜூலை 25 அன்று வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆகஸ்ட் 1 அன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆகஸ்ட் 8 அன்று குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆகஸ்ட் 16 அன்று ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளன.
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். பதிவு செய்ய விரும்புபவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் நேரில் வர வேண்டும்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
