காஞ்சிபுரத்தில் பிட்சர் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலை: ரூ.300 கோடி முதலீடு

ஜெர்மனியைச் சேர்ந்த எச்.வி.ஏ.சி (HVAC) கம்ப்ரசர் தயாரிப்பு நிறுவனமான பிட்சர், இந்தியாவில் தனது புதிய உற்பத்தி ஆலையை காஞ்சிபுரத்தில் அமைக்க உள்ளது. இந்தத் திட்டத்திற்காக 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளாவிய நிறுவனமான பிட்சர், இந்தியாவில் தனது உற்பத்தி மையத்தை அமைப்பது இதுவே முதல்முறையாகும்.
