காஞ்சியை அச்சுறுத்திய ரவுடி தணிகா கைது
காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி தணிகாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடியாக அறியப்பட்ட தணிகா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் ரவுடி ஸ்ரீதர் தனபாலின் மைத்துனர் ஆவார்.
ஸ்ரீதர் தனபாலின் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த தணிகா மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் தேடி வந்தனர்.
தணிகா காஞ்சிபுரம் அருகே உள்ள குஜராத்தி சத்திரம் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸார் அவரை கைது செய்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
