ETN News சமீபத்திய அப்டேட்கள்
Chennai · education

114 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

காளீஸ்வரி ஃபவுண்டேஷன் சார்பில் 114 இளங்கலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

114 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

காளீஸ்வரி ஃபவுண்டேஷன் சார்பில், கல்வித் திறனை நிரூபித்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய 114 இளங்கலை மாணவர்களுக்கு ஜி.என்.ஜி.ஏ. கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த கல்வி உதவித் திட்டத்தின் மூலம் இதுவரை 718 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். விழாவில் அறங்காவலர் முனுசாமி பேசுகையில், பொருளாதாரத் தடையின்றி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்கப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

கல்வி உதவித் தொகை மட்டுமின்றி, ஏழை மாணவர்களின் அறுவை சிகிச்சைக்கும், அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் இந்த ஃபவுண்டேஷன் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறது.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்