நாகர்கோவில் சிலுவை நகர் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
நாகர்கோவில் சிலுவை நகர் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி மின்விநியோகப் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட சிலுவை நகர் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (21-ம் தேதி) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிலுவை நகர், பீச் ரோடு, கோவளம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
