பாலியல் வழக்கில் 27 ஆண்டுகள் சிறை
மார்த்தாண்டம் பகுதியில் சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு போக்சோ நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

மார்த்தாண்டம் அருகே தோணிக்குழியைச் சேர்ந்த முருகன் (35) என்பவர், 2018-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
நீதிபதி சுந்தரையா விசாரித்து, முருகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீஸாரை எஸ்.பி. ஸ்டாலின் பாராட்டினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
