ஆட்டோ கவிழ்ந்து முதியவர் உயிரிழப்பு
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆலஞ்சி பகுதியைச் சேர்ந்த பத்துரோஸ் (70) என்பவர் உயிரிழந்தார்.

குளச்சல் ஆலஞ்சி பகுதியைச் சேர்ந்த பத்துரோஸ் (70) என்பவர் தனது உறவினர் முத்து என்பவருடன் ஆலங்குளம் பகுதிக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். முத்து ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பத்துரோஸ் சிகிச்சையின்றி உயிரிழந்தார். ஆலங்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
