நாகர்கோவிலில் பசுமை கருத்தரங்கம்
நாகர்கோவிலில் பசுமை இயக்கம் சார்பில் நவீன விவசாயம் மற்றும் சூழலியல் குறித்த கருத்தரங்கம் மற்றும் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

நாகர்கோவிலில் கிரீன் அக்ரிகிளம் ஆப் இந்தியா பசுமை இயக்கத்தின் சார்பில் 'அக்ரிவிஷன்' என்ற பெயரில் பசுமை கருத்தரங்கம் நடைபெற்றது. பசுமை இயக்கத் தலைவர் ராஜகுமார் தலைமை வகிக்க, துணைத் தலைவர் ரிச்சர்ட் கென்னடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வேளாண் அதிகாரிகள் கலந்துகொண்டு பேசினர். மேலும், 'நவீன விவசாயம் வளர்ச்சியைத் தருகிறது என்பது குற்றம்' என்ற தலைப்பில் பேராசிரியர் செல்வகதீஸ்வரன் தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
