நகை திருடிய பெண்கள் இருவர் கைது
குளச்சலில் அரசு பேருந்தில் பயணித்த முதியவரின் 6 பவுன் நகையைத் திருடிய இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

குளச்சலில் இருந்து குலசேகரம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த மரியஅஞ்சலி (66) என்பவரின் 6 பவுன் தங்கச்சங்கிலி திருடு போனது. இது குறித்து தக்கலை வட்டாறு போலீஸார் விசாரணை நடத்தினர்.
பேருந்தில் நகை திருடிய பொள்ளாச்சி கொட்டிக்கால்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (44), லெட்சுமி (40) ஆகிய இருவரையும் வேர்க்கிளம்பியில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.21,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
