மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் பலராமபுரத்தைச் சேர்ந்த சராபுதீன் (58), நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் திருவனந்தபுரம் செல்லக் காத்திருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வழியிலேயே அவர் இறந்துவிட்டார். நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
