கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: நடவடிக்கை கோரி புகார்
ஊட்டுவாழ்மடம் கூட்டுறவு சங்கத்தில் 20 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகப் பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
சுமார் 20 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி மற்றும் கடன் விநியோகத்தில் கையாடல் நடந்திருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
