மோதிரமலையில் காட்டுயானை அட்டகாசம்
மோதிரமலையில் காட்டுயானை மளிகைக் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மோதிரமலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக யானைகள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு பாலசந்திரன் என்பவரின் மளிகை கடைக்குள் புகுந்த காட்டுயானை, கடையின் கூரை மற்றும் ஜன்னலை உடைத்து உள்ளிருந்த அரிசியைச் சாப்பிட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியது. வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
