பிஎஃப் தொகை வழங்க கோரி முன்னாள் எம்.பி. வீடு முற்றுகை
தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய பிஎஃப் மற்றும் கிராஜூவிட்டி தொகையை வழங்கக் கோரி கரூர் முன்னாள் எம்.பி. வீட்டைத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டுப் போராடினர்.

கரூர் மாயனூரில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான கே.சி.பி. பேக்கேஜிங் நிறுவனம் மூடப்பட்டதில், பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பிஎஃப் மற்றும் கிராஜூவிட்டி தொகையை வழங்கக் கோரி தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கே.சி.பழனிசாமி வீட்டின் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார், ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
