வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.200 முதல் ரூ.1,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
