போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடி மாதப் பிறப்பு மற்றும் திருவிழாக்களை முன்னிட்டு ரூ.1 கோடி மதிப்பிலான கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. இங்கு காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி, ஆடு, மாடு மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
ஆடி மாதப் பிறப்பு மற்றும் உள்ளூர் திருவிழாக்களை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சந்தையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிக அளவில் திரண்டனர். இதனால், வழக்கமாக ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலும், பண்டிகை காலங்களில் ரூ.3 கோடி வரையிலும் நடைபெறும் வர்த்தகம், நேற்று ரூ.1 கோடி அளவுக்கு நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
