வேப்பனப்பள்ளியில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
ஜேசிபி வாடகை கட்டண உயர்வை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளியில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் ஜேசிபி வாகன வாடகை கட்டண உயர்வை வலியுறுத்தி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கத் தலைவர் சீனிவாசன் கூறுகையில், வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, இதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது என்றார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
