ETN News சமீபத்திய அப்டேட்கள்
Hosur · agriculture

ஓசூர் அருகே தக்காளி விளைச்சல் பாதிப்பு

ஓசூர் அருகே தக்காளி செடிகளில் பூஞ்சை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலால் 60 சதவீத விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஓசூர் அருகே தக்காளி விளைச்சல் பாதிப்பு

ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆவலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது தக்காளி செடிகளில் பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் 60 சதவீத விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தக்காளி பிஞ்சிலேயே வாடி உதிர்வதாகவும், காம்பு பகுதியில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு காய்கள் சிறுத்து அழுகி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். வீரியமான மருந்துகளைத் தெளித்தும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கும் அவர்கள், நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு மட்டுமே விற்பனையாவதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

செய்தி மூலம்: இந்து தமிழ் திசை

← மேலும் மாவட்ட செய்திகள்