கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரியில் வரும் 24-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆட்சியர் ச.தினேஷ்குமார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் வனத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். எனவே, விவசாயிகள் தங்கள் பகுதி பிரச்சனைகளைத் தெரிவிக்க இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
