தேன்கனிக்கோட்டை மலைக் கிராமங்களில் ஆட்சியர் ஆய்வு
தேன்கனிக்கோட்டை மலைக் கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
சித்திக்கு நகரில் உள்ள இருளர் இனக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன உரிமை தொடர்பான விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தாமல் உயர்கல்வி வரை பயில வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
