சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வித்யா விகாஸ் பள்ளி வெற்றி
ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற செஸ் மற்றும் டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்ற இப்பள்ளியின் மாணவர்கள் பல பரிசுகளை வென்றுள்ளனர். மாணவர்களின் இந்தச் சாதனையை பள்ளித் தாளாளர் சக்திவேல், முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
செய்தி மூலம்: இந்து தமிழ் திசை
